திருமணமான பெண்ணை டேட் செய்ததால் கொலை செய்யப்பட்ட நபர்...

நாக்பூரில் உள்ள பார்சோனியில் 22 வயதான கால்நடை அறிவியல் மாணவர் ஒருவர் திருமணமான பெண்ணை டேட் செய்ததால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொலை செய்து அவரது உடலை காட்டில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பச்சேரா கிராமத்தை சேர்ந்த ஆஷிஷ் ரகுநாத் கங்காலி என்பவர் (22) கடந்த அக்டோபர் 31ம் தேதி ஒரு பெண்ணை சந்திக்க அந்த பெண்ணின் பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணின் தந்தை ராம்தாஸ் பார்த்தெட்டி மற்றும் அவரது மாமா திலீப் பார்த்தெட்டி ஆகியோர் ஆஷிஷை பார்த்துள்ளனர். 

அப்போது அவர்கள் ஆஷிஷை பிடித்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்து பின்னர் அவரின் உடலை அருகிலுள்ள காட்டில் தூக்கி எறிந்துள்ளனர். 

ஆஷிஷின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.  அதனை தொடர்ந்து ராம்தாஸ் மற்றும் திலீப் மீது விசாரணை செய்யவும் புகார் அளித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ராம்தாஸ் மற்றும் திலீப்பை விசாரணை செய்ததில் ஆஷிஷை கொலை செய்து காட்டில் வீசியதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து காட்டில் சிதைந்த நிலையில் ஆஷிஷின் உடலை மீட்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்