இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடையாது என அசாம் மாநில அரசு அதிரடி சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடையாது என அசாம் மாநில அரசு அதிரடி சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
அசாம் மாநில அரசு மக்கள் தொகை கொள்கை வரைவு நேற்ரு வெளியிடப்பட்டது. அதில், 2018ம் ஆண்டு அசாமின் மக்கள் தொகை 3.5 கோடியை தாண்டி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கொள்கையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு வழங்கும் வேலை வாய்ப்புக்கான நலத்திட்டங்களும் அவர்களுக்கு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 2020 அன்று அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.