கற்பழிப்பை அனுபவிக்க வேண்டும்.. காங்கிரஸ் எம்.பி.,யின் மனைவி ட்விட்…

கற்பழிப்பை அனுபவிக்க வேண்டும்.. காங்கிரஸ் எம்.பி.,யின் மனைவி ட்விட்…

விதி என்பது கற்பழிப்பு நடப்பதைப் போன்றது. அதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால், அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.,யானவர் ஹிபி ஈடன். இவரது மனைவி அன்னா லிண்டா ஈடன். 

இவர் கேரளாவின் வெள்ளம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், விதி என்பது கற்பழிப்பு நடப்பதைப் போன்றது. அதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால், அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், சோகமான சம்பவங்களை நகைச்சுவையால் கடந்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அந்தப் பதிவைப் போட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com