கால்சட்டையை பரிசோதிக்க முயன்றதாக விமான ஊழியர்கள் மீது ஊனமுற்ற சமூக ஆர்வலர் புகார்...
கொல்கத்தா விமான நிலையத்தில் கோ ஏர் விமான நிறுவன ஊழியர்கள், அவமானப்படுத்தும்படி நடந்து கொண்டதாக, கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஊனமுற்ற ஆர்வலர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.
உலகம் முழுவதும் பயணித்து வரும் சமூக ஆர்வலரும், பெருமூளை வாதம் காரணமாக பாதிக்கப்பட்டவருமான ஜீஜா கோஷ், ஊனமுற்றவரான அவர் தனது காலில் அணிந்திருந்த டெட்டல் டிடெக்டர் பீப் என சத்தமிட்டதால், கோ ஏர் ஊழியர்கள் பேண்ட்டை பரிசோதிக்க முயன்றதாக புகார் அளித்துள்ளார்.
இயலாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய தலைநகர் டெல்லிக்கு ஜீஜா கோஷ் சென்ற இந்த பயணத்தின்போது, ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர்கள் சம்பா தாஸ்குப்தா, குஹு தாஸ் மற்றும் மனநல ஆர்வலர் ரத்னபோலி ரே ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது நடந்த சம்பவத்தை பார்த்து ஜீஜா கோஷ் ஆச்சரியப்பட்டுள்ளார். நான் பல விமானங்களில் சென்றுள்ளேன். ஆனால் இந்த மாதிரி ஒருபோதும் விமான ஊழியர்கள் தன்னிடம் கேட்டதில்லை என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பதிலளித்த கோ ஏர் அதிகாரி ஒருவர், ஜீஜா கோஷை சங்கப்படுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.