ப.சிதம்பரம் மற்றொரு வழக்கில் முறைகேடு புகார்!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீடு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், சிபிஐ தனது விசாரணை, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மட்டுமல்ல என்று கூறியுள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் முறைகேடாக நிதியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ப.சிதம்பரத்திடம் மற்றொரு வழக்காக சிபிஐ விசாரிக்க உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் 12 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட விரிவான குற்றப்பத்திரிகையில், ஷெல் என்ற நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமானது. இந்த ஷெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது. ஷெல் நிறுவனம் மூலம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், துபாய் உள்ளிட்ட 67 நாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளது. ஷெல் நிறுவனம் மூலம் பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் பெரும்பாலும் டிசம்பர் மாத தொடக்கத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
அதே நேரத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு எதிரான புகார்கள் குறித்து ப.சிதம்பரம் முழுமையாக அறிந்திருப்பதாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.