சார்க்கோலைப் பயன்படுத்தி சருமத்தை பளீச்சென மாற்றலாம்!
சார்க்கோலைப் பயன்படுத்திசருமத்தை பளீச்சென மாற்றலாம்!
அடுப்பு கரி தற்போது சருமபராமரிப்பில் ஆக்டிவேட்டர் சார்க்கோலாக விற்பனை செய்யப்படுகிறது. ஆக்டிவேட்டர் சார்க்கோல்என்றால் சமையலின் போது அடுப்பில் இருந்து வெளிப்படும் கரித்தூளைப் பக்குவப்படுத்தி,இன்னும் சில வேதிப் பொருட்களைச் சேர்த்து, முகத்திற்கு அழகூட்ட பயன்படுகிறது.
சார்க்கோல் பீல் ஆஃப் மாஸ்க் என்றும் மற்றொன்று ஜெனரல்மாஸ்க் என்றும் இரண்டு வகையில் கிடைக்கிறது. ஜென்ரல் மாஸ்க் உபயோகிப்பதாக இருந்தால்கண்களை தவிர்த்து மீதி இடங்களில் இதை அப்ளை செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்துமுகத்தை கழுவி கொள்ளலாம். மற்றொன்று பீல் ஆஃப் மாஸ்க் ஆக இருந்தால் அதை முகத்தில் போட்டுகாய்ந்ததும் உரித்து எடுத்துவிடலாம்.
சருமத்தில் இயற்கையாக வேதிப்பொருள்கள்அடங்கிய க்ரீம் வகைகளை பயன்படுத்தும் போது அவை சருமத்துக்கு ஒவ்வாமையை உண்டு செய்யும்.இந்த தயாரிப்புகளை கொண்டு சருமத்தை சுத்தம்செய்ய டோனிங், க்ளென்சிங் என்று பல பராமரிப்புகளைமேற் கொள்கிறோம். இவையெல்லாம் நாளடைவில் சருமத்தை பாதிக்கவே செய்யும். ஆனால் சருமத்தின்நச்சை வெளியேற்ற இந்த சார்க்கோல் ஃபேஸ் பேக் சிறந்த தீர்வளிக்கும். சருமத்தில் இருக்கும்அழுக்கை களைவதற்கும் உறிஞ்சுவதற்கும் நச்சுக்களை வெளியேற்றவும் சார்க்கோல் பயன்படுகிறது.
சார்க்கோல் ஃபேஷியல் செய்யும்போது முகத்தில் இருக்கும் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமத்துவாரம்சுருக்கமடையும். இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு கொள்கிறது.இதனால் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு நல்ல பலனை தரும். வறண்ட சருமம் இருப்பவர்கள்மட்டும் இதை அடிக்கடி பயன்படுத்த கூடாது.