பெண்களுக்கான சில பயனுள்ள தகவல்கள்
பெண்களுக்கான சில பயனுள்ள தகவல்கள்சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்துபொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்குணமாகும்.
இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்துஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்
உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய்கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
நீர்ச்சுருக்கு( நீர்க்கடுப்பு)
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில்முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில்காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும்.தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில்வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்துகஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்துபருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள்தீரும்.
மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பானதண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
உடல் வனப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில்வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல்வனப்பு பெறும். அனைவருக்கும்பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு,மருத்துவகுறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.