வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய அழகுக் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய அழகுக் குறிப்புகள்
வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய அழகுக் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய அழகுக் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகானபாதத்திற்கு தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடுதாங்கும் அளவு வெந்நீர், உப்பு,  எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகுபிரஷ்சினால் சுத்தம்  செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகுபாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய  டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

கண்ணுக்குகீழ் உள்ள கருப்பு வளையம் மறைய சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம்இருக்கும். இந்த  பிரச்சினைதான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாகநீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து போடுவதுபயன் தரும்.

ஒருமெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்கவேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கருவளையம்இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 

கோதுமைமாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாகமறைந்து விடும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com