அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் அகலமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிய கிண்ணத்தை வைக்கவும்.
இப்போது அந்தக் கிண்ணத்தில் 2 டீஸ்பூன் ஷியா பட்டர் சேர்த்து கிண்டவும். பின் பட்டர் உருகியதும் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன், 5 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறும் சேர்த்து கலக்கவும்.
இப்போது அடுப்பை அணைத்து, மணத்துக்காக 10 சொட்டுகள் லேவண்டர் ஆயில் விட்டு கலந்து, ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்வித்து எடுக்கவும். லிப்ஸ்டிக்கை தவிர்த்து விட்டு, இதையே லிப் பாமாக பயன்படுத்தலாம்.
இது உங்கள் உதட்டை இயற்கையாக சிவப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.