வாரம் ஒருமுறை பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவது சருமத்தைத் தளர்வடையாமல் இறுக்கமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும்.
எனவே பப்பாளி, வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட பழங்களோடு வாழைப்பழத் தோலை கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்வதால் சுருக்கம் மறைந்து முகம் மினுமினுக்கும். மேலும் மாதம் ஒருமுறை பாதாம் ஃபேஷியல் செய்தாலும் சருமத்தில் சுருக்கம் விழாது.
தினமும் தூங்குவதற்கு முன்பாக ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி சுத்தம் செய்யவும்.
இதனால் முகத்தில் அதிகம் எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தபட்டு, முகம் பளிச்சிடும்.