வீட்டில் அழுகுக்காக் பிளாஸ்டிக் பூக்கள் வைத்திருப்போம். தூசுபடியும் இந்தப் பூக்களை சுத்தப்படுத்த ஒரு சுலப வழி இதோ... பிளாஸ்டிக் பூக்களையும் சிறிது உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு நன்றாகக் குலுக்கவும். இப்போது பளிச்சென்ற பிளாஸ்டிக் பூ உங்களுக்குக் கிடைக்கும்! தவிர, வினிகர் கலந்த தண்ணீராலும் பிளாஸ்டிக் பூக்களை துடைத்து எடுக்கலாம். பிளாஸ்டிக் பூக்களை வெயிலில் படும்படி மட்டும் வைக்கக் கூடாது.