வெள்ளி நகையை வைத்திருக்கும் டப்பாக்களில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால், அவை கறுக்காது. வெள்ளி நகையை புளித்த பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு அவற்றை சுத்தம் செய்தால், புதிது போல் பளிச்சிடும்.
வெள்ளிப் பொருள்களை ஒரு துணியில் சுருட்டி வைக்கவும் அப்படியே டப்பாவில் வைக்கக்கூடாது...குறிப்பாக, வெல்வெட் துணி பெட்டியில் வெள்ளியை வைக்கவே கூடாது.