முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரை தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது. அடுத்தது மாய்ச்சுரைசிங் க்ரீம் இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இந்த ஈரப்பதம் தான் நம் இளமையை தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளமையுடன் தெரிவது இதனால்தான்.