ஞாபக சக்திக்கு வேட்டு வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்!.. – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு ரிப்போர்ட்

அதிகளவிலான பதப்படுத்தப்பட்ட பொருட்களை உண்பது ஞாபகமறதிக்கு வழிவகுக்கும் என எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது
அமெரிக்கா ஒகியோ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவை கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டதில் எலிகளின் ஞாபக திறன் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பரிசோதிக்கப்பட்ட எலிகளில் வயதான எலிக்கு மட்டுமே ஞாபக திறன் குறைந்துள்ளது எனவும், வயதில் சிறிய எலிக்கு ஞாபக குறைபாடு ஏற்படவில்லை எனவும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன
இதுவே, ஒமேகா 3 அமிலத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நினைவாற்றலில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவு வயதானவர்களின் நினைவுதிறனை குறைக்கிறது என்ற உண்மை இவாய்வினால் கண்டறியப்பட்டுள்ளது