பயறு வகைகளின் பல்சுவை சமையல்!.. – தேனம்மை லஷ்மணன்

பயறு வகைகளின் பல்சுவை சமையல்!.. – தேனம்மை லஷ்மணன்

தேவையானவை: கருப்புக் கொண்டைக் கடலை-1 கப், உருளைக்கிழங்கு-1, ப்ரெட்-1 ஸ்லைஸ், பெரிய வெங்காயம்-1, பச்சைமிளகாய்-2, இஞ்சி-அரை இஞ்ச் துண்டு, கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி, வெண்ணெய்-2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், உப்பு-அரை டீஸ்பூன், ரஸ்க் தூள்-கால் கப், எண்ணெய்-100 மிலி

செய்முறை: கருப்புக் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். 4, 5 விசில் வரை குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துப் போடவும். இதில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, வெண்ணெய், ப்ரெட், மிளகாய்த்தூள் போட்டுப் பிசையவும். கட்லெட்டுகளாகத் தட்டி ரஸ்க்குத் தூளில் புரட்டி நான் ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Find Us Hereஇங்கே தேடவும்