கருவை கலைக்க பெண்களுக்கு உரிமையுண்டு: கேரள உயர் நீதிமன்றம்!

கருவை கலைக்க பெண்களுக்கு உரிமையுண்டு: கேரள உயர் நீதிமன்றம்!

கருவை கலைக்க பெண்களுக்கு உரிமையுண்டு என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் தரித்த நிலையில், அவரது  வயிற்றில் வளரும்  சிசு குறைபாடுகளுடன் உள்ளது சோதனையில் தெரிந்தது. இதையடுத்து குறைபாடுகளுடன் உடைய 22 வார சிசுவை கலைப்பதற்கு அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக  தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், கா்ப்பிணியான பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பார்வை திறன் குறைபாடுடனும் உள்ளது. மேலும் அவரது இடது கால் செயலிழந்து நடக்க முடியாமல் உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. 

இதனை ஆய்வு செய்த பின்னர் தீர்ப்பு வழங்கிய கேரளா உயர் நீதிமன்றம், ‘கர்ப்பிணியின்  வயிற்றில் வளரும் 22 வார சிசுவுக்கு ‘கிளைன்ஃபெல்டா்’ என்னும் மரபணு கோளாறு உள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரைக் கொல்லும் அளவுக்கு  இந்த குறைபாடு அபாயகரமானதில்லை என்றாலும் குறைபாடுகள் கொண்ட அந்த குழந்தை வளரும்போது அதன் தேவையைப் புரிந்துகொள்வதில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு சிரமம் ஏற்படக்கூடும். 

மேலும் கருவை வைத்துக்கொள்வதா அல்லது கலைப்பதா என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு, கருக்கலைப்புச் சட்டப்படி, குறிப்பிட்டக் வாரங்கள் வரை வளா்ந்துள்ள சிசுவை கலைப்பதற்கு தாயாருக்கு உரிமை உள்ளது. மேலும், வயிற்றில் வளரும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தால் அதைக் கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிக்கின்றன. எனவே, கா்ப்பிணியின் வயிற்றில் வளரும் 22 வார சிசுவைக் கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்