கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் !

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்று 'கொடைக்கானல்'. கொரோனா பேரிடர் காரணமாக சுற்றுலா தளங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சுதந்திர தின விழாவை ஒட்டி விடுமுறையில் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் விடுதி உரிமையாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.