பயணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பே இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் !

பயணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பே இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் !

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியருக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணியருக்கும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாகும். 

இந்நிலையில் சிறிது தளர்வுகளுக்கு பின்னர் தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதனால், பயணியர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா மையங்களில்  சோதனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தற்போது கொரோனா பரிசோதனை மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. 

இதைத் தவிர்க்க, ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர்., முறை, இம்மாதம் 5ம் தேதி அறிமுகமானது. இந்த சோதனையில் 30 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது, பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தின் டுவிட்டர் பக்தத்தில், அதற்கான, க்யூ.ஆர்., கோடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்பதிவு செய்யும் பயணியருக்கு நேரம் ஒதுக்கப்படும். உரிய நேரத்தில் அவர்கள் வந்து உடனடியாக சோதனையை மேற்கொள்ளலாம். இதனால், கொரோனா பரிசோதனைக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை மேலும் பயனிகளுக்கும் இந்த வசதி சுலபமாக உள்ளது  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Find Us Hereஇங்கே தேடவும்