மத்திய அரசின் FAME II திட்டத்தின் கீழ் மும்பை போக்குவரத்து கழகத்துக்கு ஏசி பஸ் !

மத்திய அரசின் FAME II திட்டத்தின் கீழ் மும்பை போக்குவரத்து கழகத்துக்கு ஏசி பஸ் !

மத்திய அரசின் FAME இந்தியா திட்டத்தின் கீழ் டாடா நிறுவனம் பல்வேறு மாநில அரசுகளுடன் மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்க ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில் தற்போது மும்பை போக்குவரத்து கழகத்துக்கு ஏசி வசதியுடன் கூடிய 35 மின்சார ஸ்டார் பஸ்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. 

340 மின்சார பேருந்துகள் வழங்க மும்பை போக்குவரத்து கழகமான Brihanmumbai Electric Supply and Transport (BEST) உடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, டாடா நிறுவனம் ஏற்கனவே 26 அதிநவீன ஏசி மின்சார பேருந்துகளை கடந்த ஆண்டு வழங்கியது. தற்போது இரண்டாவது கட்டமாக 35 ஏசி மின்சாரப் பேருந்துகளை டாடா நிறுவனம் பெஸ்ட் போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்தப் பேருந்துகளின் தயாரிப்பு, விநியோகம், பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் டாடா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்கு ஏற்ப லிப்ட் மெக்கானிஸம் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும். விசாலமான உட்புற அமைப்புகளுடன், சார்ஜிங் போர்ட்டல்கள், அவசர கால வெளியேறும் பாதை உள்ளன.

 ஐ.டி.எஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் ரிஜெனரேட் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த  ஸ்டார் பஸ்கள் , அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் வகையில் டாடா நிறுவனம் பல்வேறு பகுதிகளில் கடுமையான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்