வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே வறண்ட சருமத்தை மென்மையாக்கலாம்...

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே வறண்ட சருமத்தை மென்மையாக்கலாம்...

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே வறண்ட சருமத்தை
மென்மையாக்கலாம்...பொதுவாக சருமத்தில்
ஏற்படும் வறட்சிக்கு நீர்க்குறைவு மட்டுமின்றி, அதிகப்படியான காற்றும், அளவுக்கு அதிகமான
சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதும் தான் காரணம். இத்தகைய பிரச்சனை குளிர்காலங்களில்
மட்டுமின்றி, கோடைகாலத்திலும் தான் ஏற்படும். அதிலும் அடிக்கடி வேலையின் காரணமாக வெளியே
வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் அதிகப்படியான சூரியக்கதிர்கள் படுவதால், சருமத்தில்
உள்ள நீர்ச்சத்தானது குறைந்து, இறுதியில் வறட்சியை உண்டாக்குகிறது.தண்ணீர்


வறட்சியைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழி அதிகப்படியான
தண்ணீர் குடிப்பது தான். அதிலும் தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால்,
உடலில் உள்ள வறட்சியைப் போக்கலாம். ஆனால் இவற்றை விட அதிகம் குடிப்பது இன்னும் நல்லது.பேபி லோஷன்


சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்குவதில் சிறந்தது பேபி
லோசன் தான். ஏனெனில் குழந்தைகளுக்கு தயாரிக்கும் பேபி லோசனில் கெமிக்கல் அதிகம் இல்லாததால்,
சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.பாதாம் எண்ணெய்


வெதுவெதுப்பான பாலில் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து
கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி உறங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.


நல்லெண்ணெய்


கடைகளில் விற்கும் மாய்ச்சுரைசரைப் பயன்படுத்துவதற்கு
பதிலாக, குளித்தப் பின்பு வீட்டில் இருக்கும் நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவினால்,
வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம். சருமமும் பட்டுப் போன்று மின்னும்.தேங்காய் எண்ணெய்


வறட்சியான சருமத்தை போக்குவதில் தேங்காய் எண்ணெய் மிகவும்
சிறந்தது. எனவே தினமும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி ஊற
வைத்து, காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.பெட்ரோலியம் ஜெல்லி


சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க பெட்ரோலியம் ஜெல்லி
பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் உதடுகள், பாதங்கள் போன்ற இடங்களில் வறட்சி ஏற்படாமல்
இருப்பதற்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தலாம்.வாழைப்பழம்


வறட்சியான சருமத்திற்கு வாழைப்பழத்தை வைத்து செய்யப்படும்
ஃபேஸ் பேக் சிறந்த ஒன்று. அதற்கு வாழைப்பழத்தை மசித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து,
வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

Find Us Hereஇங்கே தேடவும்