சில உபயோகமுள்ள கிச்சன் டிப்ஸ்….

சில உபயோகமுள்ள கிச்சன் டிப்ஸ்….

சில உபயோகமுள்ள
கிச்சன் டிப்ஸ்….

 



வெங்காயத்தை
நான்கு பாகமாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைத்த பிறகு நறுக்கினால் கண்கள் எரிச்சல்
ஏற்படாது.


* மீன்
பொறிக்கும் போது வரும் வாசனை அருகில் உள்ள வீடுகளில் சிலருக்கு பிடிக்கும்
சிலருக்கு பிடிக்காது, அந்த
வாசனை வெளியே செல்லாமல் இருக்க நாம்  மீன் பொறிக்கும் போது அடுப்பின்
அருகில் ஒரு பெரிய மெழுகுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு மீன்களை பொறித்தால் வாசனை நம்
வீட்டை தாண்டாது.



* வாழைத்தண்டை
நறுக்கி மோரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும்.



* பூண்டை
தட்டிப்போட்டு சமைப்பதை விட தோல் உரித்து காற்றாட விட்டு சமைப்பதே சிறந்தது .



* முட்டையைப்
பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் சிறிது மிளகு தூள்
சேர்த்துக்கொள்வது நல்லது .



* தோசை
வராமல் போனால் உடனடியாக தோசைக் கல்லின் மீது உப்புத்தூளைக் கொட்டி முழுமையாக தடவி
பின்னர் உப்பை தள்ளிவிட்டு தோசை மாவை ஊற்றினால் தோசை அழகாக வரும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    68.69%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.53%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.77%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்