முகத்தைப் பொலிவாக்கும் நெய் மாஸ்க்

முகத்தைப் பொலிவாக்கும் நெய் மாஸ்க்

முகத்தைப் பொலிவாக்கும் நெய் மாஸ்க்

நெய் உங்கள்
சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிறைந்துள்ளது.
மேலும் உதடு வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் பண்புகளுக்கு
பெயர் பெற்றது. இதுதவிர, நெய் உங்கள் சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சரை செய்கிறது. அனைத்து
வகையான சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கிறது. பசும்பாலில்
இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் SPF இருப்பதால், இவை சூரிய ஒளிக்கு எதிராக வலுவான
பாதுகாப்பு ஷீல்டாக செயல்படக்கூடும்.உங்கள் சருமத்தை பராமரிக்க
பலவித ஸ்க்ரப்-ஐ உபயோகிப்பதை போல, நெய்யையும் ஒரு பேஸ்மாஸ்க்காக சருமத்தில் தடவலாம்.
உங்கள் முகத்தில் நெய்யைப் பூசி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அதை இரவு முழுவதும்
அப்படியே விட்டுவிட்டு, காலையில் சோப்பு போட்டு முகத்தை கழுவுங்கள். சிறிது நேரத்திலேயே,
உங்கள் சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்கும். இருப்பினும் எல்லோருக்கும்
ஒரேமாதிரியான சருமத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால் நீங்கள் எந்த மாதிரியான தோல் பிரச்சினைகளில்
சிக்கியிருந்தாலும் சரி, உங்கள் சருமத்தின் அமைப்பு உயிரற்றதாக உணர்ந்தால், இந்த எளிதான
DIY (Do It Yourself) பேஸ்பேக்கை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் நல்ல முடிவு உங்களுக்கு
கிடைக்கும்.

 

டீஹைடிரேடட்
சருமத்திற்கு நெய் மாஸ்க்கை எவ்வாறு பயன்படுத்தலாம்:


உங்கள் சருமம் வறட்சியாகவும் கடினமாகவும் இருந்தால்,
தோல் பராமரிப்புக்காக நெய்யைப் பயன்படுத்தத் வேண்டிய சரியான நேரம் இதுதான். சரி உங்கள்
நீரிழப்பு சருமத்திற்கு நெய் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து காண்போம்.
சிறிது சந்தனப் பொடியை எடுத்து அதனுடன் மஞ்சள் மற்றும் நெய் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட்டை
உருவாக்கிக்கொள்ளுங்கள். அந்த பேஸ்டை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.
பின்னர் 20 நிமிடங்கள் பேக்கை உலர விட்டு குளிர்ச்சியான நீரில் முகத்தை கழுவுங்கள்.
முகம் நன்கு மிருதுவாகும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்