நம் அன்றாட காலை சிற்றுண்டிகளில் ஒன்றாக இருப்பது தோசை. தோசையை சுட்டுதான் பார்த்திருப்போம். ஆனால், மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் தோசை பறக்கிறது. அது என்ன பறக்கிறது? என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த வீடியோவை பார்த்தால் புரியும். விறுவிறுப்பாக தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக அதனை வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார். ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிரப்பட்ட, இந்த பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் போட்டுள்ளனர். வாடிக்கையாளர்களை கவருவதற்காக இப்படி செய்தாலும், உணவை பறக்கவிடுவது அவமரியாதை என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்