முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் நீக்கலாம்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் நீக்கலாம்!
முட்டையின்
வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும்
வெளியேற்றி, கரும்புள்ளிகளைப் போக்கும்.
தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வருவதன் மூலம், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள்
வெளியேறும். மேலும் தினமும் முகத்தை 3 முறை கழுவி வரவேண்டும். இதனாலும்
முகத்தில் அழுக்குகள் தங்குவதைத் தடுக்கலாம்.
சர்க்கரையை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்ய
வேண்டும். இதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் அழகாக
இருக்கும்.
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும்.
இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை