முக சீரம் பற்றி தெரியுமா?

முக சீரம் பற்றி தெரியுமா?
மாசற்ற பளிச்சிடும் முகம் எல்லோருக்கும் பிடிக்கும். உங்கள் சருமம் மிக
மந்தமாகவும் பருக்கள், சுருக்கங்கள் மற்றும் நிறம் மாற்றம் அடைந்திருந்தால்,பேஸ் சீரம் பயன்படுத்துங்கள்.
பேஸ் சீரம் அவசியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! இதில் இருக்கும்
சருமத்திற்கான ஊட்டச்சத்து உங்கள் சருமத்தை மீண்டும் ஒரு புது பொலிவுடன் காண்பிக்க
உதவும். மேல் கூறி இருக்கும் அணைத்து குறைபாடுகளையும் சரி செய்யும் இந்த பேஸ்
சீரம் (face serum). இதில் சில சீரம்களை இரவிலும், சிலதை பகலிலும்
பின்பற்ற வேண்டும்.
சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் பியூட்டி
பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம்.
இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின்
துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும். முந்தைய நாட்களில் மாய்ஸ்சரைசர் மற்றும்
ஆன்டி ஏஜிங் க்ரீம் போன்றவற்றை தான் பயன்படுத்தி வந்தோம் .ஆனால் இப்பொழுது சீரம்
மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. சீரமும் மாய்ஸ்சரைசரையும் சேர்த்து லேயரிங் பண்ணும் போது பொருட்களின்
அடர்த்தி மிகவும் முக்கியமானது. முதலில் அடர்த்தி குறைந்த லைட் பொருட்களை லேயரிங்
செய்து அப்புறம் அடர்த்தி அதிகமான பொருட்களை லேயரிங் செய்ய வேண்டும். சீரத்தை
ஃபௌண்டேஷனில் கலந்தும் பயன்படுத்தலாம்.
Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு