உங்களுடைய முக்கியமான சான்றுகள், ஆவணங்களை டிஜிட்டல் செய்வது எப்படி.?

இந்த  விடுமுறை நாட்களில்  உங்கள் ஒவ்வொருவருக்கும் நிறைய நேரம் கிடைத்துள்ளது. அதை பயனுள்ளதாக்க  உங்களிடம் உள்ள முக்கியமான சான்றுகள், ஆவணங்களை டிஜிட்டல் செய்ய பயன்படுத்தி கொள்ளுங்கள். 

 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முந்தைய நாள் world backup day ஆக  கொண்டாடப்படுகிறது. நீங்கள்  எப்பொழுதும் உங்கள்  கம்ப்யூட்டரில் இருக்கும் ஆவணங்களை  backup செய்து வைத்திருப்பீர்கள்.

அதுபோல உங்களின் பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், பழைய புகைப்படங்கள் மற்றும் பல முக்கியமான  ஆவணங்களை டிஜிட்டலாக பேக்கப் செய்து வைக்க நினைத்ததுண்டா?

 உங்களின் முக்கியமான சான்றிதழ்களை டிஜிட்டலில் ஸ்கேன் செய்து password கொடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உங்களிடம் ஒரு  ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டும் போதும். இதோ அதற்கான  வழி முறைகள்...

முதலில் உங்களிடம் உள்ள  இதுவரையில் நீங்கள் பாதுகாத்து வைத்திருந்த போட்டோக்கள், பழைய கடிதங்கள், newspaper cuttings மற்றும் உங்களிடம் உள்ள  எல்லா முக்கியமான ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சான்றிதழ்களையும், போட்டோக்களையும் ஸ்கேன் செய்வதற்கு நிறைய நேரம் எடுக்கலாம். ஆகவே உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்டுக் கொண்டு இந்த வேலையை ஆரம்பிக்கலாம். சாப்பிடும் எந்த  உணவுப் பொருளையும் ஆவணங்களின்  அருகில் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆவணங்கள் மீது தெரியாமல் கொட்டிவிட்டால் ஆவணங்கள் பாழாக நேரிடும்.

அடுத்ததாக,

 உங்கள் வீட்டில்  multi-function பிரிண்டர் இருந்தால் அதன் மூலம் ஸ்கேன் செய்யலாம். multi-function  பிரிண்டரில் எப்படி ஸ்கேன் செய்வது என்று  பிரிண்டர் உடன் கொடுக்கப்பட்டுள்ள  user manualஐ பார்த்து தெரிந்துகொண்டு ஸ்கேன் செய்யலாம்.

 உங்கள் கம்ப்யூட்டரிலும் ஸ்கேன் செய்வதற்கான  செட்டிங்ஸை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்  உங்களின்  பிரிண்டர் மூலம் ஸ்கேன் செய்து போட்டோக்களையும், சான்றிதழ்களையும் உங்கள் கம்ப்யூட்டரில்  password கொடுத்து PDF file ஆக பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம்.

  

 உங்களிடம் கம்ப்யூட்டர் இல்லை என்றால் உங்களின் ஸ்மார்ட்போன் மூலமாகவும்  ஸ்கேன்  செய்யலாம்.  உங்கள் ஸ்மார்ட்போனில்  app store சென்று  (mobile scanning app) மொபைல் ஸ்கேனிங் ஆப் டவுன்லோட் செய்து அதன்மூலம் உங்களின் சான்றிதழ்களையும் போட்டோக்களையும், பிற முக்கியமான ஆவணங்களையும்  படமெடுத்து  pdf ஆக அல்லது இமேஜ் ஆக சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

ஆனால் ஒரு ஸ்கேனிங் ஆப்பை டவுன்லோட் செய்யும் பொழுது private policy என்னும் அதன் கம்பெனி தரும் தகவல்களை விபரமாகப்  படித்துக் கொள்வது நல்லது.

 Adobe scan, dropbox, evernote ஆகிய  ஆப்களின் மூலமும்   ஸ்கேன் செய்யலாம்.  உங்களின் ஐடி கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு,  பான் கார்டு, போன்றவை டிஜிட்டலாக சேமித்து வைப்பதன் மூலம் அவசர தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 உங்களின் பழைய  சிதைந்துபோன கருப்பு வெள்ளை படங்களை கூட அழகாக எடிட்டிங் செய்து பாதுகாப்பாக  டிஜிட்டலில் சேமிக்கலாம்.

Photo scan by google photos போன்ற ஆப்புகள் மூலம்  இலவசமாக பழைய படங்களை  ஸ்கேன் மற்றும் editing செய்யலாம். Photos can by  photomyne போன்ற  ஆப்களும்  படங்களை ஸ்கேன் மற்றும் editing செய்ய உதவுகிறது. இந்த ஆப் ஒரு மாதம் இலவசமாகவும் பின்பு  மாதம்  700 முதல் 800 ரூபாய் கட்டணத்தில் ஸ்கேன் செய்ய உதவுகிறது.

சேமிக்கப்பட்ட நமது தனிப்பட்ட தகவல்கள் hackers மூலம் திருடபடாமலிருக்க  நமது கம்ப்யூட்டரிலும்  ஸ்மார்ட் போனிலும் password பயன்படுத்தி நமது  சான்றிதழ்களையும், படங்களையும், முக்கியமான ஆவணங்களையும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் தகவல்களை  என்கிரிப்ட் எனப்படும்  மறையாக்கம் மூலமாகவும் பாதுகாப்பாக ஆன்லைனிலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போது நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க,  நமது  முக்கியமான ஆவணங்களையும், படங்களையும் டிஜிட்டல் ஆக்குவதன் மூலம் நம் தேவைக்கேற்ப அதை  எதிர்காலத்தில் எளிதில் பயன்படுத்தி கொள்ளலாம். 

காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவோம்!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்