கொஞ்சம் எலட்ரானிக்ஸ் பொருட்களையும் கவனிங்க!

கொஞ்சம் எலட்ரானிக்ஸ் பொருட்களையும் கவனிங்க!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முகத்தை அடிக்கடி கைகளால் தொடக்கூடாது, கைகளை அடிக்கடிசோப்பு போட்டு கழுவ வேண்டும், இரும்மும் போதும், தும்மும் போதும் முழங்கையைக் கொண்டே முகத்தை மூட வேண்டும். என்பதில் ஒவ்வொரு தனி நபரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் மூலம் அனைவரும் வீடுகளில் இருக்கிறோம். அலுவலக வேலைகளை வீட்டில் செய்யும் இவ்வேளையில், மொபைல் போன், லேப்டாப் என்று இவற்றை அதிகமாக பயன்படுத்துவோம். இவற்றில் கிருமி தொற்று இருக்காது என நினைக்கிறீர்களா? 

 பொதுவாகவே நாம், வீடுகளில் உள்ள மரச்சாம்மான்கள், தரையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வோம். தற்போது உள்ள சூழ்நிலையில், நம் மின்னணு சாதனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.  இவைகளை முறையாக பின்பற்றும் போது, வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

உலக சுகாதார அமைப்பின் படி நாம், 20 விநாடிகளுக்கு தொடர்ந்து கைகளைக் கழுவ வேண்டும். ஆல்கஹால் கலந்துள்ள சோப்பு மற்றும் சானிடைசர்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.  

கைகளை எப்படி சுத்தம் செய்வது என்ற நெறி முறைகளையும் வகுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. உள்ளங்கைகள், கைகளின் பின்புறம், கை இடுக்குகளில் நன்றாக சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும். நாம் அடிக்கடி பயன்படுத்தும், லேப்டாப், மொபைல் போன், ஆகியவற்றை, கிருமி நாசினி கொண்டு துடைக்கலாம்.

கிருமி நாசினியை லேப்டாப், மொபைல் போன் மீது நேரடியாக பயன்படுத்தாமல், துணியிலோ அல்லது டிஷ்யூ பேப்பர் மூலமாகவோ எடுத்து பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றின் மூலமாகவும், வைரஸ், பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளது. மின்னணு சாதனங்கள் மீது, திரவ நிலையில் உள்ள, கிருமி நாசினிகளை பயன்படுத்தக் கூடாது. பிளீச்சிங், வினிகர் மற்றும் கெமிக்கல் பொருட்களைக் பயன்படுத்தக் கூடாது. மின்னணு பொருட்களை சுத்தம் செய்யும் போது, கை கிளவுஸ் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 

மொபைல் போன்களை துடைக்கும் போது, நான்கு முனைகளிலும், நன்றாக துடைக்க வேண்டும். மொபைல் சார்ஜர், USB கேபிள் மற்றும் போன் உறைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மொபைல் திரையை சுத்தம் செய்யும் போது கூடுதல் கவனம் வேண்டும். இதே போல் உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை சுத்தம் செய்யும் போது, முதலில் கி போர்டுகளை சானிடைசர்களைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். எப்போதும் இவைகளை சுத்தமாக வைத்திருப்பது நம் உடல் நலனிற்கு நல்லது தானே.

வீட்டில் உள்ள பர்னீச்சர்களையும் இந்நேரத்தில் சுத்தம் செய்வது இன்றியமையாதது. ஊரடங்கு சமயத்தில் இது போன்று சிறு சிறு வேலைகளை செய்வது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும்.

நாம் அதிகமாக பயன்படுத்தும் கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டுகள், சமையலறை, குளியலறை, டேபிள் போன்றவற்றை முதலில் சோப்பு நீரால் நன்கு துடைத்துவிட்டு, பின் அதன் மீது கிருமி நாசினியை ஸ்பிரே செய்து  துடைக்க வேண்டும். அதிக தூசுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

ஸ்பிரே பயன்படுத்தும் போது, மென்மையான துணிகளை துடைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். தரையை சுத்தம் செய்யும் போது, கிருமி நாசினிகளை உபயோகப் படுத்துவது நல்லது. இவற்றை நாம் தினமும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  57.23%
 • இல்லை
  33.96%
 • யோசிக்கலாம்
  5.03%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.77%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்