இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10,000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக்குறைவாக இருந்து வந்த நிலையில், இன்று கொரோனாவால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 36,07,657 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 35,66,279 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் 7,533 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 53,852 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 44 இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,31,468 ஆக தற்போது அதிகரித்துள்ளது.