ஆரோக்கியம்
இந்தியா: அதிகரிக்கும் கொரோனா - 24 மணிநேரத்தில் 9,629 பேருக்குத் தொற்று
இந்தியா: அதிகரிக்கும் கொரோனா - 24 மணிநேரத்தில் 9,629 பேருக்குத் தொற்று
நேற்றைய தினம் குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்திருக்கிறது கொரோனா தொற்று.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 9,629 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியதாகப் பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,967- ஆக உள்ளது.
மேலும் இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றை விட 44 சதவிதம் உயர்ந்துள்ளது.