சென்னை: ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் - கோயம்பேடு ரெய்டில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை: ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் - கோயம்பேடு ரெய்டில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் - கோயம்பேடு ரெய்டில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது ரசாயனம் கலந்து மாம்பழங்களைப் பழுக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுமார் 2 டன் மாம்பழங்கள் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்து ஆய்வில் தெரியவந்தது.

இதனையடுத்து ரசாயனம் கலந்து மாம்பழங்களை  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் ரசாயனம் கலந்து மாம்பழங்களைப் பழுக்க வைக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதமும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விதித்தனர். 

மேலும் ரசாயனம் கலந்து விற்கக்கூடிய பழங்கள் பொதுமக்களுக்குச் சிறுநீரக பிரச்னை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபோன்று தொடர்ந்து ஈடுபடக் கூடிய கடைகளின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாம்பழங்கள் அனைத்தையும் காலி மைதானத்தில் கொட்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து மாம்பழங்களை பொதுமக்கள் வாங்கிச் செல்ல சூழ்நிலையில் தற்போது ரசாயனம் கலந்த மாம்பழங்கள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மாற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com