இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய்த் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 67,556 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று 12,193 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,69,684 -லிருந்து 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,258-லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 10,780 பேர் கொரோனா தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று 10,765 பேர் குணமாகியுள்ளனர்.
கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.66 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.