நேற்று 10,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,542 ஆக அதிகரித்து இருந்த நிலையில் இன்று 12 ஆயிரத்தையும் கடந்து அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 10,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,190-லிருந்து 5,31,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8,175 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 10,827 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.