அதிகரிக்கும் கொரோனா: 'கவலையடைய வைக்கும் திரிபு' - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாடு முழுவதும் இன்ஃபுளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், கொரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் பரவலாக செலுத்தப்பட்ட பின்னரே, ஓரளவு இயல்வு நிலை திரும்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் (மார்ச் 15) 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் 617 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 117 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.
மேலும் 4,197 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று கர்நாடகாவில் 2 பேரும் மகாராஷ்டிராவில் 2 பேரும் உத்தரகண்ட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பரவிவரும் கொரோனா பரவலின் தன்மை குறித்து விரிவான மூலக்கூறு ஆய்வு நடந்துள்ளது. இதுகுறித்துப் பேசும் ஆராய்ச்சியாளர்கள், 'இந்தியா, புருனே, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.
அங்கு பரவும் கொரோனா வகைகளை ஆராய்ந்ததில், சில பகுதிகளில் XBB.1.16 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்தப் புதிய வகை உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புதிய கொரோனா வகைகளை கண்காணிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தடுப்பூசி பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர் டாக்டர் விபின் வசிஷ்டா கூறுகையில், ' முந்தைய XBB.1.16 மற்றும் XBB 1.5 ஆகிய கொரோனா வகைகள் உலகின் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
தற்போது பரவும் XBB 1.16 என்ற புதிய வகை கொரோனா கவலையடைய வைக்கிறது. இதில் உள்ள இரு‘ஓஆர்எஃப்9பி’ திரிபுகள், நோய் தடுப்புச் சக்தியில் இருந்து தப்பி பாதிப்பை ஏற்படுத்துகின்றன’ என்கிறார்.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அளித்துள்ள தகவலின்படி, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் கோவையில் புதிதாக 13 பேருக்கும் சென்னையில் 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 'கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்' என பொதுமக்களுக்கு மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை