காய்ச்சல் அதிகரிப்பா? இந்த மருந்துகளை எடுத்துக்காதீங்க!- IMA அட்வைஸ்

நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை தீவிரமாக பரவி வருகிறது. ஒருமுறை காய்ச்சல் வந்தால் அது ஒரு வாரத்துக்கும் மேல் நீடிப்பதுடன் உடல்வலியும் அதிகரிப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நாடு முழுவதும் H3N2 வைரஸ் மூலம் காய்ச்சல், சளி, இருமல் அதிகரித்து வருகிறது. இது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்குக் குறைவானவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை தரக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. எந்தெந்த மருந்துகளைத் தரக்கூடாது என்ற பட்டியலையும் ஐஎம்ஏ வெளியிட்டுள்ளது.
அதில், அசித்ரோமைஸின், அமாக்ஸிகிளேவ் (Azithromycin and Amoxiclav) மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். வைரஸ் தொற்றால் டயேரியா பாதிப்புகள் ஏற்படுவதால், amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தவறாக கொடுக்கின்றனர். தொற்று பரவலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை