ஏழு வருடங்களாக ஆய்வு செய்யப்படாத அரசு மருத்துவர்கள்களின் பிரச்சனைகள்- உறுதிகொடுத்த அமைச்சர்!

ஏழு வருடங்களாக ஆய்வு செய்யப்படாத அரசு மருத்துவர்கள்களின் பிரச்சனைகள்- உறுதிகொடுத்த அமைச்சர்!

உடம்புக்கும் மனசுக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் அரசு மருத்துவர்களை நோக்கி செல்கிறோம். ஆனால், அவர்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் யாரிடம் செல்வார்கள்? இது ஏழை எளிய நோயாளிகளைத்தானே பாதிக்கும்? 

அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய திருத்தம் 5 வருடங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படவேண்டும். கடைசியாக 2012-ல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதற்குபிறகு, இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மருத்துவர்கள் மத்தியில் குமுறலாய் வெடித்துக்கொண்டிருக்கிறது. 

இந்தநிலையில், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சமீபத்தில் சந்தித்து  கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? என்று மருத்துவர்களிடம் நாம் கேட்டபோது, 

 “நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய திருத்தம் செய்ய அரசாணை 354 ஐ மறு ஆய்வு செய்து அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கக் கோரினோம்.5 வருடங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 ல் தான் இறுதியாக நடைபெற்றது. 2017 மற்றும் 2022 ல் மறு ஆய்வு செய்யப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டப்பட்டது. அதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதன் பேரில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செயலாளரிடம் ஆலோசனை செய்து விரைவில் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், அரசு மருத்துவர்கள் மாதம் 500 ரூபாய் பங்களிப்பில் உருவான சேம நல நிதியிலிருந்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, பகிர்ந்தளிக்க கேட்டுக்கொண்டதன் பேரில், மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூடிய விரைவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கையால் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அரசாணை 225 மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணி நேரத்தை மாற்றியதைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டார். திருத்திய அரசாணையை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்