சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு பிரச்சனைகள்

சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு பிரச்சனைகள்

ஆண்மைக் குறைபாடு (Infertility), குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்து வரும் வேளையில் அதற்கு நீரிழிவு நோயும் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சாதாரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்களைக் காட்டிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக ஆண்மைக் குறைபாடு, கருவளம் குன்றுதல், விந்தணு குறைபாடு, பாலியல் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கும் ஆண்மைக் குறைபாடு, பாலியல் ஆர்வம் குறைதல், விறைப்புக் கோளாறு ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு குறித்து பெரும்பாலானோருக்கும் இருக்கும் சந்தேகங்களையும் அதற்கான பதில்களையும் இங்கே பார்க்கலாம்.

நீரிழிவு ஆண்களின் கருவுறுதலை பாதிக்குமா?

ஆம். நீரிழிவு பிரச்சினை இருக்கும்போது நரம்புகளில் தளர்வு உண்டாகும். இது விறைப்புத்தன்மை மற்றும் விந்துதள்ளலைக் கட்டுப்படுத்துகிற இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்துவதன் மூலம் ஆண்களின் கருவுறுதலைப் பாதிக்கும். இதன் காரணமாக விறைப்புச் செயலிழப்பு, விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

 உயர் இரத்த சர்க்கரை அளவு ஆண்களின் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை இனப்பெருக்க அமைப்பில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் செல்வதைத் தடுத்து விறைப்புக் கோளாறை உண்டாக்கும். கூடுதலாக, உயர் இரத்த சர்க்கரை அளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் விந்தணு உற்பத்தி ஆகியவற்றைப் பாதிக்கும். குறிப்பாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு நோயினால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையின் அறிகுறிகள் என்ன?

நீரிழிவு நோயினால் ஏற்படும் ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறிகளில் சில முக்கியமானவை இதோ, ஹார்மோன்கள் குறைபாடு, விறைப்புக் கோளாறு, பாலுறவில் ஈடுபாடு குறைதல், விந்து வெளியேற்றத்தில் ஏற்படும் சிக்கல்கள், விந்தணு எண்ணிக்கை குறைபாடு,விந்துவின் தன்மை மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

 நீரிழிவு மருந்துகள் ஆண் கருவளத்தை பாதிக்குமா?

இன்சுலின் மற்றும் மெட்ஃபோர்மின் போன்ற சில நீரிழிவு மருந்துகள் ஆண்களின் கருவுறுதலை பெரிதாக பாதிக்காது.ஆனால் சல்போனிலூரியாஸ் மற்றும் தியாசோலிடினியோன்ஸ் போன்ற பிற மருந்துகள் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து விந்தணு உற்பத்தியைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

நீரிழிவு பிரச்சினை உள்ள இளம் வயது ஆண்கள் என்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்தால் ஆண் கருவுறுதலை மேம்படுத்தலாம்?

புகைபிடிப்பதை நிறுத்துதல், மது அருந்துவதை கட்டுப்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் கருவளத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான விந்தணு உற்பத்தியைப் பெறவும் வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய் உள்ள இளம் வயது ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?

நிச்சயம் முடியும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைகளைப் பெறலாம். ஆனால் அவர்கள் கருவுருதலையும் கருவளத்தையும் மேம்படுத்த சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இரத்த சர்க்கரை அளவை சரியான முறையில் நிர்வகித்தல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை முறையாகப் பின்பற்றினால் நீரிழிவு நோயுள்ள ஆண்கள் மிக எளிதாக குழந்தைப் பேறை அடைய முடியும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்