’புற்றுநோயை எதிர்க்க ஒன்றுபடுவோம்’ - இன்று உலக புற்றுநோய் தினம்

 ’புற்றுநோயை எதிர்க்க ஒன்றுபடுவோம்’ - இன்று உலக புற்றுநோய் தினம்
உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் உலகில்  பல மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர். இதனைத் தடுக்க உலகளவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இந்த உலக புற்றுநோய் தினம். இத்தினத்தில் புற்றுநோய் அபாயங்கள், மருத்துவ அணுகுமுறை, நோய் தடுப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்கள் பறைசாற்றப்படுகின்றன. இதற்காக உலகின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணிகள், மருத்துவ முகாம்கள் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.

மேலும் இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் இதன் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

வரலாறு முக்கியம் அமைச்சரே....

1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியமான UICC - ஆல்  கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினம் உருவாக்கப்பட்டது. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து பரப்புவதற்கான முயற்சிகளில் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-யுடன் கைக்கோர்த்து வருகின்றன. 

பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் இந்த உலக புற்றுநோய் தினத்தை அனுசரிப்பதற்கான  முடிவு எடுக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் 10 கட்டுரைகளைக் கொண்ட ஒரு ஆவணத்தை இம்மாநாட்டில் உருவாக்கினர். இந்த ஆவணம் புற்றுநோய்க்கு எதிரான Charter of Paris என்று அழைக்கப்பட்டது.

 உலகளவில் புற்றுநோய் ஆராய்ச்சி, தடுப்பு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றங்களில் நிலையான முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

நோக்கமும் விழிப்புணர்வும்... 

UICC அமைப்பு  மில்லியன் கணக்கான மக்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தினத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், UICC சுகாதார அமைப்பு புற்றுநோய் நிறுவனங்களுடன் சேர்ந்து கல்வி நடவடிக்கைகளை வகுத்தல், பொது சேவை அறிவிப்புகளை வெளியிடல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

மேலும், புற்றுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை அளிக்க பாடம் புகட்டும் விஷயங்களை வீடியோக்களாக பதிவு செய்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,  சுகாதார நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் மையங்களால் வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.

இத்தினம் விழிப்புணர்வு பேரணி,  உள்ளூர் நிதி திரட்டும் நிகழ்வான அணிவகுப்பு, கச்சேரி, கண்காட்சி மற்றும் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிறப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது புற்றுநோய் பற்றிய வானொலி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் அந்த முழு வாரமும் சில நாடுகளால் புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Theme of the day என்னனு தெரியுமா?

2023 ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள், "close the care gap" - நமது குரல்களை ஒன்றிணைத்து புற்றுநோய்க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பராமரிப்பு இடைவெளியை நிறுத்துவதுதான். அதாவது முழுமையான குணப்படுதல் நோக்கி நகர்வது. 

மக்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். மேலும், க்ளோஸ் தி கேர் கேப்,  மருத்துவ மதிப்பீடு மற்றும் கவனிப்பை பெரிய அளவில் மக்களுக்கு வழங்குவதை வலியுறுத்துகிறது.

-ஜெஸ்பெல் எஸ்லின்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்