மாரடைப்பு அறிகுறிகளும்... கடைபிடிக்க வேண்டியவைகளும்...

மாரடைப்பு அறிகுறிகளும்... கடைபிடிக்க வேண்டியவைகளும்...

மாரடைப்பு என்பது இதயத்தில் சீராக செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாகும். இதய தமனிகளில் கொழுப்பு அல்லது ரத்தத் திரள்கள் ஏற்பட்டு, ரத்தம் சீராக செல்வதைத் தடுப்பதாகும்.

பொதுவாக வயதானோர், உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் உட்கார்ந்த நிலையில் பணியாற்றுபவர்கள் (Sedentary Work), உணவுப் பழக்கவழக்கங்கள், தூக்கமின்மை இவை முக்கியக் காரணங்களாக உள்ளன.

ரத்தத்தில் அதிரோசிஸ், திராம்போசிஸ் போன்றவைகளும் இதன் முக்கியக் காரணங்களாகும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிக கொழுப்புச்சத்து, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எளிதில் மாரடைப்பு ஏற்படும்.

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளான படபடப்பு, முகம் மற்றும் உடல் முழுவதும் வியர்த்தல், தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வலி, இடது தோள்பட்டையிலிருந்து இடது கை முழுவதும் வலி, மூச்சுத்திணறல், மயக்கம், தலைச்சுற்றல் உள்ளிட்டவை ஆகும்.

துரித உணவு, அதிக எண்ணெய் கலந்த உணவுகள், டால்டா, பாமாயிலில் சமைத்த உணவுகளை தவிர்த்தல், அதிக நேரம் கணினி அல்லது இரவு நேரங்களில் போனில் அதிக நேரம் செலவிடுவது, அதிக பணிச்சுமை, மன அழுத்தம், அதிக கவலை, சோகம் ஆகிய காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உண்டு.

இதை சரிசெய்ய சரியான கட்டுப்பாட்டான உணவுமுறையை (Diet) பின்பற்றுதல், தினமும் உடற்பயிற்சி (Aerobic and Anaerobic Excercise), மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்தல்.

அதேபோல் மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகள் மற்றும் உணவு முறைகள், எவ்வளவு மணி நேரம் நடக்க வேண்டும் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்