வாய் துர்நாற்றமா (Halitosis)... இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...!

வாய் துர்நாற்றமா (Halitosis)... இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...!

வாய் துர்நாற்றம் என்பது சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாததால் வரும் குடல் புண் (Ulcer) அல்லது சரியாக தினமும் பல் துலக்காததே காரணம்.

ஆக வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் இவை இரண்டு மட்டுமே. குடல்புண் நீங்க சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். அதிக அமிலம் (Acetic) கலந்த உணவைத் தவிர்க்க வேண்டும். அதிக எண்ணெய் மற்றும் காரம் கலந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், காலையும் இரவும் பல் துலக்க வேண்டும். காலை எழுந்தவுடன் முதலில் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை நீக்க, வாயை கொப்பளித்த பின் பல் துலக்கி, நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். அதிக பேருக்கு காலை எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் உண்டு. இதுவே வாயில் துர்நாற்றமும், குடல் புண்ணும் வர முதல் காரணம். காலை எழுந்ததும் வாயை சுத்தப்படுத்தி முதலில் நீரை அருந்த வேண்டும். 

அடிக்கடி அல்லது நாளுக்கொருமுறை காலையில் புதினா கொதிக்கவைத்த நீரில், சிறிதளவு எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகள், அதிக காரம் மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உணவில் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளியே பேசுபவர்களிடம் வாயில் துர்நாற்றம் வராமல் இருக்க சிறிய டிப்ஸ்: கிராம்பு அல்லது ஏலக்காய், சோம்பு இவற்றை மென்றுவர வேண்டும். அதேபோல் ஈறுகளிலும் பிரச்னை இருந்தாலும் பற்களில் ரத்தக்கசிவு, துர்நாற்றம் ஏற்படும். இவற்றைப்போக்க வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து (Iron) நிறைந்த உணவுகளையும், புரதச்சத்து நிறைந்து உணவுகளையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்டபின், வைட்டமின் சி-யை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உடலில் அனைத்து செல்களுக்கும் இரும்புச்சத்து சேர்வதற்கு துணைபுரிவது வைட்டமின் சி ஆகும். பெரும்பாலும் உணவு உட்கொண்டபின் 

எலுமிச்சை சாறோ அல்லது ஆரஞ்சு பழச்சாறோ எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக மாலை நேரங்களில் வேகவைத்த பாசிப்பயறு போன்ற பயறு வகைகள் சாப்பிடும் போது, அதனுடன் எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு உட்கொண்டால், அதன் முழுச்சத்தும் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், மாலை நேரத்தின் சிறந்த சிற்றுண்டியாகவும் இருக்கும்.  

முட்டை, பயறு மற்றும் பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி நிறைந்த நெல்லி, கொய்யா, எலுமிச்சை சாறு இவற்றையும் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டவற்றை தொடர்ந்து செய்துவந்தால் வாய் துர்நாற்றம், ஈறு உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்