300 குழந்தைகள் மரணம்: இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கான இருமல் மருந்தை அருந்திய குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
இந்த இருமல் மருந்துகளில் டைத்தலின் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை அதிக அளவு இருந்ததால் 7 நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட 300கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு, இவை நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் என்றும், குறைவாக உட்கொண்டால் கூட மரணம் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் மருந்துகளில் இவை சேர்க்கப்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளின் உயிரை பறித்த தரக்குறைவான இருமல் மருந்துகளை தயாரித்த மருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே