அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கொரோனா பூஸ்டர் டோஸ் பரிந்துரை

அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கொரோனா பூஸ்டர் டோஸ் பரிந்துரை

அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் தீவிர அலையாக பரவியபோது, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இதனால், தாக்கத்தில் இருந்து மக்கள் ஓரளவு தப்பித்தனர். எனினும், அந்நாட்டில் டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வகைகளின் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது. இதனால், கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு அந்நாடு பெருமுயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இதற்கேற்ப தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்கு பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளை பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவில், மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா பாதிப்புக்கு எதிராக குறைந்தது ஒரு டோஸ் எடுத்துக்கொண்டுள்ளனர். எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பூஸ்டர் டோசை, தகுதி வாய்ந்த 16 சதவீதம் பேரே இதுவரை எடுத்துக்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த விகித வேற்றுமை மற்றும் கொரோனா பாதிப்பு, பரவல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அரசுக்கு சில விஷயங்களை பரிந்துரைத்துள்ளது. இதன்படி, உருமாறி வரும் கொரோனா பாதிப்பில் இருந்து முதியவர்கள், குழந்தைகள் தப்பித்துக் கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை கொரோனா பூஸ்டர் டோஸை செலுத்த ஒப்புதல் அளிக்கும்படி பரிந்துரை தெரிவித்துள்ளது. 

இதனால், எத்தனை தடுப்பூசி டோஸ்களை இதுவரை மக்கள் எடுத்துள்ளனர் என்றோ மற்றும் கடைசி தடுப்பூசி டோஸுக்கு பின் எத்தனை மாத இடைவெளியில் மக்கள் அடுத்த பூஸ்டர் டோஸை எடுத்துக்கொள்கின்றனர் என்றோ கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் அமெரிக்கர்களுக்கு இருக்காது. 

இந்த பரிந்துரையின்படி, இனி ஆண்டுதோறும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளுக்கு மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்று கொரோனா தடுப்பூசிகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுபோக, கொரோனா பூஸ்டர் டோஸ்கள் அதிக அளவில் கிடைப்பது சிரமம் என்ற நிலையும் காணப்படுகிறது. அதனால், வருங்காலத்தில் எளிமையான நடைமுறையை மேற்கொள்ள இந்த விஷயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்