தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா...!

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா...!

அனைவரும் எளிய முறையில் தங்களின் உடல் உபாதைகளைச் சரிசெய்து கொள்ளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும்.

நாம் அனைவரும் வீட்டில் வாரத்திற்கு இரண்டு முறையாவது சமையலுக்கோ அல்லது பூஜைக்கோ உபயோகப்படுத்தும் பொருள் தேங்காய் ஆகும்.

தேங்காயின் முக்கியத்துவம் வாய்ந்த நன்மைகள் குறித்துக் காண்போம். பலரும் தங்களின் காலை உணவைத் தவிர்த்து வருகின்றனர். அந்நபர்களுக்கும், குடல்புண் (Ulcer) உள்ள நபர்களுக்கும் தேங்காய் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படும்.

குடல்புண் உள்ளவர்களுக்கு எளிய முறையில் கைகொடுக்கும் ஒன்று தேங்காய்ப் பால். தேங்காய் உடைத்து அரை மணி நேரத்திற்குள் இதைச் செய்தால், பலன் அதிகம். காலை வெறும் வயிற்றில், சிறு தேங்காய் துண்டை எடுத்துப் பொடியாக நறுக்கி, 200 மி.லி. அளவு நீரை ஊற்றி அரைக்க வேண்டும்.

அரைக்கும் போது, சிறிது சோம்பு, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை உடன் சேர்த்து அரைத்து தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். 

200 அளவிற்குத் தேங்காய்ப் பாலை எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்துவர, குடல்புண் விரைவில் குணமாகிவிடும். குடல்புண் அதிகம் உள்ளவர்கள் தேங்காய்ப் பாலில் நீர் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய்ப் பாலில் சோம்பு, பனங்கற்கண்டு, இவற்றைச் சேர்க்காமலும் அரைக்கலாம். இதன் பலன் முழுமையாகக் கிடைக்கத் தேங்காயை உடைத்த அரை மணி நேரத்திற்குள் இவற்றைச் செய்ய வேண்டும். அதேபோல் தேங்காய் சாதம் உண்டுவரப் பலன் கிடைக்கும்.

ஏனெனில், தேங்காயில் உயிர்ச்சத்து பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளதால், எளிதில் குடல்புண்ணை ஆற்றும். மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும். தேங்காயில் புரதம், செலினியம் நிறைந்துள்ளதால் முடி உதிர்வு, இளநரை ஏற்படுவதைத் தடுத்து கருமையான கூந்தல் வளர துணை புரியும்.

இவற்றில் அடங்கிய நல்ல கொழுப்பு தோலின் சுருக்கங்களைப் போக்கி, என்றும் இளமையான தோற்றத்தைத் தரும். முகப்பரு, தோல் சார்ந்த பிரச்சினைகளை போக்குகிறது. 

அதுமட்டுமல்லாது, விடாது இருமல் இருப்பவர்களுக்குத் தேங்காயில் மருந்து தயாரித்துக் கொடுக்கலாம். அதை எப்படிச் செய்வதென்று பார்ப்போம். அரைமூடி தேங்காயைத் துருவி எடுத்துக்கொண்டு, வாணலியில் நல்லெண்ணெய், துருவிய தேங்காய், சுக்குப்பொடி, மிளகுதூள், பனங்கற்கண்டு இவற்றைச் சேர்த்து நன்கு பொன்னிறம் வரும்வரை கிளறவும்.

இதேபோல், இருமல் குறையும் வரை தினமும் காலையோ அல்லது மாலையோ சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரத்திற்குள் நீர் அருந்தக் கூடாது. அப்படி அருந்தினால் அதன் மருத்துவத்தன்மை முழுமையாக உடலுக்குக் கிடைக்காது.

இதை முடிந்தவரை வெறும் வயிற்றில் சாப்பிட விரைவில் சளி, இருமல் குணமாகும். உணவிலும், சமைக்கும் போதும் தூய தேங்காய் எண்ணெய்யைச் சேர்த்துவர உடலுக்கு நன்மை கிடைக்கும்.

தேங்காயை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கொழுப்பு மற்றும் கலோரி அதிகமாகி பல்வேறு உடல் உபாதைகளை  ஏற்படுத்தும். எனவே அளவுடன் உண்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்