கரும்பின் நன்மைகள்

கரும்பின் நன்மைகள்
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று உழவர் திருநாளான தைத்திருநாள். கிராமப் புறங்களில் இப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நாளில் மக்கள் அதிகாலை எழுந்து வாசலில் வண்ணகோலங்கள் இட்டு, பொங்கல் வைத்து கொண்டாட்டத்தை தொடங்குவர். 

தைத்திருநாள் என்றாலே சர்க்கரை பொங்கல், கரும்பு, ஜல்லிக்கட்டு என தொடர்ந்து மூன்று நாள்களில் விழாவாக கொண்டாடப்படும். சீசன் பழங்கள் என்று சொல்லக்கூடிய பருவகால பழங்களைப்போல், இக்காலம் கரும்பிற்கு ஏற்ற காலமாகும். 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பை விரும்பி உட்கொள்ளாத மனிதர்களே இல்லை. கரும்பில் இருக்கும் நீர்ச்சத்தும், எலக்ட்ரோலைட்ஸும் உடலில் வறட்சி ஏற்படாமலும், உடல் வெப்பநிலையை சமன்செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவை (Glucose) சரியாக வைத்திருக்கும். 

மேலும், இதிலிருக்கும் கனிம சத்துக்களான கால்சியம்,மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், குளோரின், சோடியம் உள்ளிட்ட நுண்சத்துக்கள் உடலினை உறுதியாகவும், எலும்புகளை வலுப்படுத்தவும் செய்யும்.

அதுமட்டுமல்லாது, ரத்தத்திற்குத் தேவையான அதிகப்படியான நீர்ச்சத்தும் இதில் உண்டு. ரத்தத்தை சுத்திகரிப்புச் செய்து ஆக்ஸிஜன் செரிமானத்தை அதிகப்படுத்தும். இதனால் உடலில் இறந்த செல்களை புதுப்பித்து புது செல்கள் உருவாகும். 

சோர்வின்மையை போக்கும்

பொலிவான சருமத்தையும், புத்துணர்ச்சியாக செயல்படும் நாளையும் கொடுக்கிறது கரும்பு. கரும்பை நன்கு கடித்து மென்று சாப்பிடுவதால், முக தாடைகளும், பற்களும் வலுப்பெறும்.

உடலில் செரிமானக் கோளாறு, சிறுநீரகப் பிரச்னை, பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றை சரிசெய்ய தினமும் ஒரு டம்ளர் அளவு (200 மி.லி) கரும்புச்சாறு உட்கொண்டால் பலன் கிடைக்கும். மார்பகப் புற்றுநோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டது கரும்புச் சாறு. 

அதிக உடல் சூடு உள்ளவர்களும் கரும்புச்சாறு அருந்திவர வேண்டும். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடித்தாலே உடல்சூடு குறையும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் அந்தந்த சீசனில் கிடைப்பதையும் உண்ண வேண்டும். கரும்புச்சாறால் உடல் வெப்பம் தணிவதோடு, நுண்சத்துக்களும் கிடைக்கும்.

ஆக தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு அருந்திவர பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்