மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு

கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது கவலை அளிப்பதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான தரவுகளை பகிருமாறு சீனாவுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் உருவான சீனாவில்தான் தற்போது அதன் தாக்கம் அதிவேகத்தில் உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "இந்த தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய புரிதலில் உள்ள இடைவெளி, எதிர்கால தொற்றுநோயை தடுக்கும் நமது திறமைக்கு சவாலாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய தரவுகளை தரவும் சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் சீனாவுக்கு உரிய ஆதரவு வழங்கப்படும் எனவும் அதானோம் தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே