சரும நோய் பாதிப்பில் விடுதி மாணவர்கள்,,,

சரும நோய் பாதிப்பில் விடுதி மாணவர்கள்,,,

மகாராஜகடை பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் விடுதியில் பெரும்பாலான மாணவர்களுக்கு சரும நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜடை அடுத்த தாசினாவூரில் அரசினர் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இதில், வேப்பனஹள்ளி, ஏக்கல் நத்தம், சூளகிரி, வரட்டனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 55 மாணவர்கள் தங்கியுள்ளனர். 

இதில், 16 பேர் எம்.சி.பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 39 பேர் மகாராஜகடை உயர்நிலைப்பள்ளியிலும் படிக்கின்றனர். 

இந்த மாணவர்களில், 27 பேர் சொரி , படர்தாமரை போன்ற சரும நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக சரும நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு விடுதி,  நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எம்.சி.,பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், 197 மாணவர்களும் மகாராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளியில், 337 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், எங்கள் பிள்ளைகளின், கை, கால், இடுப்பு பகுதிகள் முழுவதும் சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் உடல்நலம் குறித்து எங்களுக்கு தெரியவில்லை. 

சமீபத்தில் வீட்டிற்கு வந்த போது அதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். மற்ற விடுதி மாணவர்களுக்கும்  இதுபோல் பாதிப்பு இருப்பதும் தெரிந்தது. மகாராஜகடை மற்றும் எம்.சி.,பள்ளிகளில் உள்ள மூன்று விடுதிகளில் மகாராஜகடை பள்ளி விடுதி மாணவர்கள் மட்டும் சருமநோயால் பாதிப்படைந்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மகராஜகடை விடுதி வார்டன் சரவணன் கூறுகையில், பள்ளி விடுதி, கழிவறை, குடிநீர் சுத்தமாக வைத்துள்ளோம். மாணவர்கள் தங்கள் ஆடைகளை அறைக்குள்ளேயே காய வைக்கின்றனர். அதனால் தான் சரும நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த நவ.,10ல், மருத்துவரை அழைத்து வந்தும் காண்பித்தோம். மருத்துவமனையில் செல்லுமாறு கூறியும் மாணவர்கள் கேட்பதில்லை என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு பரவி வரும் சரும நோய் குறித்து கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் தலையிட்டு உடனடியாக மருத்துவமுகாம் நடத்த வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்