உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 : ஏன் கொண்டாடப்படுகிறது..?

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 : ஏன் கொண்டாடப்படுகிறது..?

உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தீம் எனும் கருப்பொருளுடன் குறிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் "தாய்ப்பால் பாதுகாத்தல்  அனைவருக்குமான பொறுப்பு" என்பதாகும்.

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

உலகளாவிய அளவில் தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,20,000 குழந்தை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2019-20ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறையில் கவலை அளிக்கும் போக்கு காணப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்