மும்பையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!

மும்பையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!

மும்பையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,765 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.

சீனா வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவியதால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் பெரு நகரான மகாராஷ்டிராவில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக நேற்றைய தினம் மட்டும் கிட்டத்தட்ட 2,701 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் மும்பையில் மட்டும் சுமார் 1,765 புதிய கோவிட் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 2,701 கொரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ள வழக்குகள் 10,000 க்கும் குறைவாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிய வழக்குகளுடன் மாநிலத்தில் உள்ள மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 78,98,815 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 11,47,866 ஆகவும் உள்ளது. 9,806 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் பதிவாகியுள்ள 1,765 புதிய கோவிட் வழக்குகளில் பெரும்பான்மையானவை அறிகுறியற்றவை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்