5 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்றா? உ.பி சோதனை

5 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்றா? உ.பி சோதனை

5 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று இருப்பதாக கருதி, அதனுடைய மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று, பல்வேறு உலக நாடுகளிலும் பரவி தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குரங்கு அம்மை வைரஸ் தொற்று சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியா சார்பில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கப்பல் தளங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை வைரஸ் தொற்று இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஐந்து வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஐந்து வயது குழந்தையின் தாய், தனது குழந்தைக்கு தழும்புகள் மற்றும் கொப்புளங்கள் வந்ததாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதனை சோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று இருக்கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையை தனிமைப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து புனேயில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைராலஜி பிரிவிற்கு குழந்தையிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்