ஊரடங்கில் விடாமல் குடி; இந்தியர்களின் கல்லீரலை பதம் பார்த்த பாதிப்பு

ஊரடங்கில் விடாமல் குடி; இந்தியர்களின் கல்லீரலை பதம் பார்த்த பாதிப்பு

ஊரடங்கில் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் இந்தியர்களின் கல்லீரல் பாதிப்பு அதிகரித்துள்ளது. 

இது குறித்து கல்கத்தாவில் உள்ள இந்திய கல்லீரல் மற்றும் செரிமான நோய்களுக்கான நிறுவனத்தில் பணிபுரியும் இரப்பை குடல் மருத்துவர் செளவிக் மித்ரா கூறுகையில், ”கொரோனா தொற்றின்போது NAFLD ன் நிகழ்வுகளில் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கொரோனா தொற்றின்போது அதிகரித்த உடல் பருமன் மற்றும் உட்கார்ந்தே இருந்த வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இதனால் மதுவினால் ஏற்படும் கல்லீரல் நோய்களில் கணிசமான அதிகரிப்பு இருப்பதையும் நாம் காண்கிறோம். இருப்பினும் அதற்கு ஒரு எண்ணிக்கையோடு நிறுத்துவது தான் கடினமான ஒன்று. பலர் தடுப்பூசிகளை தவறவிட்டதால் ஹெபடைடிஸ் ஏ நோயையும் நாம் அதிகம் பார்க்கிறோம். 

மேலும் 2020 முதல் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மது அருந்துதலில் 100 க்கும் அதிகமான கூடுதல் இறப்புகளுக்கும் 2,800 கூடுதல் சிதைந்த சிரோசிஸ் நோய்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதேசமயம் ஒரு வருடத்திற்கும் மேலாக மது அருந்துவதினால் கூடுதல் நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு கூட அது வழிவகுக்கும்” எனக் கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்