அதிகரிக்கும் கொரோனா! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதார செயலர் கடிதம்...!

அதிகரிக்கும் கொரோனா! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதார செயலர் கடிதம்...!

தமிகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் விஸ்பரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. 

அதிலும் சென்னையில் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் "தமிழகத்தில் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். 

வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கூட்ட நெரிசலில் உள்ள பகுதிகளுக்கு சென்ற மக்களுக்கு அறிகுறி தெரிந்தால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் கொரோனா பரவல் தொற்று விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்